01 ஆகஸ்ட் 1000 மணி (MET); நிறம்: சிவப்பு , பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பற்றிய எச்சரிக்கை
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மணிக்கு (60-70) கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும். புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5 3.5 மீ) அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, மறு அறிவித்தல் வரை புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல் www.meteo.gov.lk, 117, DMC

No comments:
Post a Comment